Dino வும் Hafi யும் அண்ணன் தம்பிகள். 9 வயது 8 வயது. பெற்றோர் வேலைக்குச் செல்ல பராமரிப்புக்கென என்னிடம் வருகிறார்கள். பிரச்சனை எதுவும் இல்லை. சேர்ந்தே விளையாடுகிறார்கள். புதிதாக 7 வயது யாசின் வந்தபோதுதான் பிரச்சினை ஆரம்பமாகிறது. சேர்ந்து விளையாட இஸ்ரம் இல்லை. சிறிது சிறிதாக சண்டை ஆரம்பிக்கிறது. எந்த விதத்திலும் சமாதனப்படுத்த முடியவில்லை. அது எனக்கும் வேலை பளுவாக மாறுகிறது. வீடு யுத்தக்களமாக மாறுகின்றது. பிள்ளைகளை வெளியே அழைத்துச் செல்வது நலமென முடிவெடுக்கிறேன்.
பிள்ளைகள் 3 பேருடன் விளையாட்டுத் திடலுக்கு விரைகின்றேன். விளையாட்டுத்திடலுக்கு செல்வது எந்தப் பிள்ளைக்குத்தான் பிடிக்காது. அந்த மகிழ்ச்சியில் சண்டைகள் சற்றுக் குறையத்தொடங்குகின்றன. இப்போது தான் ஆரம்பிக்கிறது ஆச்சரியம். ஆரம்பத்தில் சேர்ந்து விளையாட பின்தங்கிய பிள்ளைகள் தம்மை மறந்து சேர்ந்து விளையாடுகிறார்கள். விளையாட்டின் பொது பல கதைகள் பேசுகின்றார்கள். அந்த உரையாடல்களில் நட்பு தலை தூக்குகிறது. சண்டைகள் மறைந்துபோகின்றன. பிள்ளைகள் 3 பெரும் சீரான நடத்தைகளைக் காட்டுகின்றாகள்.
விளையாட்டுத் திடலில் இருந்து வீடு திரும்பும் போதும் , பின்பு வீட்டிலும் இந்த சமாதான உணர்வு நீடிக்கிறது. எனக்கு மனதினுள் பொறி தட்டுகிறது. பிள்ளைகளிற்கு பிடித்த ஆரோக்கியமான வெளிப்புறச் சூழலை கொடுக்கும் போது அவர்களில் சீரான நடத்தைகள் தூண்டப்படுகிறது. அது விளையாட்டுத் திடலாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் அதுபோன்ற இடங்களை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.
இந்தத் தத்துவம் பிள்ளைகளிற்கு மட்டும் அல்ல பெரியவர்களும்மும் பொருந்தும்.