எம் பிள்ளைகளிற்கு நாம் காட்டுகின்ற கண்டிப்பு ஓர் அளவுடன் இருக்க வேண்டும். அளவுக்கு அதிகமான கண்டிப்பு பிள்ளைகளில் பாரதூரமான விளைவுகளை ஏற்ப்படுத்தும்.
இது என் மகளின் தோழியின் கதை. அவள் ஓர் அழகான யப்பானியச் சிறுமி. பார்ப்பதற்கு ஒர் ரோஜாப்பூப்போல மென்மையாக இருப்பாள். பழகுவதற்கு மிகவும் இனிமையானவள். படிப்பில் மிகவும் கெட்டிக்காரி. என் மகளிற்கு அவளுடைய நட்புக் கிடைத்ததற்க்காக மிகவும் மகிழ்ச்சியும் மனநிறைவும் அடைந்திருக்கிறேன்.
அவளுக்குப் பிரச்சனை அவளுடைய அம்மாதான். அவர் உண்மையிலேயே நல்லவர்தான். மிகவும் அக்கறையுள்ள ஒரு தாய். மகளுக்கு எந்தக் குறையும் வைப்பது இல்லை. மகள் ந ல்ல மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்பதில் அதிக தீவிரம் காட்டுகின்றார். தப்பித் தவறி மகள் குறைவான மதிப்பெண்கள் வாங்கினால் அதிகம் கண்டிக்கிறார். இங்கே தான் பிரச்சனை ஆரம்பிக்கிறது.
தாயுடைய அளவுக்கதிகமான கண்டிப்பு மகளினுள்ளே குழப்பங்களை உண்டுபண்ணுகின்றது. விளைவு: தாயினுடைய கண்டிப்புக்கும் நச்சரிப்புக்கும் பயந்த மகள் பரீட்சை நேரங்களில் நேர்மைக்குறைவாக நடந்து கொள்கின்றாள். பரீட்சையின் போது பாடப் புத்தகங்கள மறைத்து வைத்துப் பார்த்து எழுதுகின்றாள். சிறு காகிதத் துண்டுகளில் குறிப்புகளை எடுத்து வைத்து பரீட்சை நேரங்களில் பார்த்து எழுதுகின்றாள்.
இது ஒன்றும் அவளுடைய இயற்க்கைச் சுபாவம் இல்லை. நல்லொழுக்கம் நிறைந்த பெற்றோரிற்குப் பிறந்த நல்லொழுக்கம் மிக்க பெண்தான் அவள். அவளுடைய இந்த நேர்மைக் குறைவான புதிய நடத்தைக்குக் காரணம் அவளுடைய தாயின் அளவுக்கு அதிகமான கண்டிப்புத்தான். இந்த நிலமை இப்படியே தொடர்ந்தால் பிள்ளையில் எவ்வளவு பாரதூரமான விளைவுகள் ஏற்ப்படப் போகின்றன.
பிள்ளைகளின் படிப்பு விடயங்களிலும் சுதந்திரத் தன்மையிலும் அளவுக்கு அதிகமான கண்டிப்புக் காட்டுகின்ற பெற்றோர் ஒரு கணம் சிந்திக்க வேண்டும். பிள்ளைகள் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்க மாட்டார்கள். அவர்களுடைய மதிப்பெண்கள் கூடிக் குறைவது இயல்பான விடயம் தான். அதற்க்காகப் பெற்றோர் பதட்டம் அடையத் தேவையில்லை. பிள்ளைகள் குறைவான மதிப்பெண்கள் எடுப்பதற்கான காரணத்தைக் கண்டறிந்து அதை நிவர்த்தி செய்ய முயற்சி செய்ய வேண்டும்.

This comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
Deleteஓ! ஜே தா! எனது பிரச்சனை தமிழ் இல்லை. தமிழ் தட்டெழுத்துத்தான். ஐரோப்பிய நாடொன்றில் வாழ்கின்றேன். சிறுவர் தொடர்பாக எம்மவரிடம் காணாத ஆயிரம் ஆயிரம் அற்ப்புத அணுகு முறைகளைத் தினமும் காண்கின்றேன். அவற்றை எல்லாம் பதிவு செய்ய வேண்டும் என்ற வேகம் தான் மனதில் மேலோங்கி நிற்க்கிறது. நீங்கள் குறிப்பிட்டவற்றைத் திருத்தியிருக்கின்றேன். நன்றி
Deleteபெற்றோர் அறியவேண்டிய அருமையான பதிவு வாழ்த்துக்கள்.
ReplyDelete