Sunday, 9 June 2013

சமையலறை பிள்ளைகள் கல்வி கற்கும் ஓர் இடம்


சாராவுக்கு அப்போது இரண்டரை வயது.  காண்கின்ற எல்லாப் பொருட்கலையுமே ஆராய்ந்து பார்க்கின்ற வயது. நான் மும்மரமாக மதியச் சமையலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன்.  சாரா எனுடன் கூட இருந்து விளையாடிக் கொண்டிருந்தாள்.  அப்போது அங்கிருந்த ஒரு எவர்சில்வர் மூடி அவள் கண்ணில் பட்டது.  அதை ஆர்வமாக எடுத்துத் தொட்டுப் பார்த்தாள்.  அந்த மூடி தவறுதலாக அவள் கையிலிருந்து நளுவி கீழே விழுந்து பெரிய ஓசை எழுப்பிக் கொண்டு அதிர்ந்து அடங்கியது.  சாராவை அந்த மூடி எழுப்பிய இனிமையான ஓசையும் அது அதிர்ந்து அடங்கிய விதமும் மிகவும் கவர்ந்தன.  சாரா ஒரு பரிசோதனை போல அந்த மூடியை திரும்பத்திரும்பக் கீழே விழுத்தி அதன் அதிர்வையும் அது எழுப்பிய ஓசையையும் அவதானித்தாள்.  தன் தொழிற்ப்பாடு பற்ரிய என் அபிப்பிராயத்தை அறிவதற்க்காக இடையிடையே என் முகத்தையும் பார்த்தாள்.

அவள் தன்னிச்சையாக ஒரு கல்விச்செயற்ப்பாட்டில் ஈடு படுகின்றாள் என அறிந்து கொண்ட நான் ஒரு பராமரிப்பாளராக என் கடமையை உணர்ந்து கொண்டேன்.  மிக சுவாரசியமாக அந்த மூடி பற்றியும் அது எழுப்பிய ஓசை பற்றியும் உரையாடினேன்.

தன் தொழிற்ப்பாட்டில் என் எதிர்ப்பு எதுவும் இல்லை, மாறாக ஆதரவு மட்டுமே இருக்கின்றது என அறிந்து கொண்ட சாரா அந்த மூடியைப் பல்வேறு வித்தியாசமான இடங்கலில் மோத வைத்து அல்லது விழ வைத்து அது எழுப்பும் வித்தியாசமான ஓசைகளைப் பரிசோதித்தாள்.

இந்தச் செயற்ப்பாட்டின் போது அவள் பெற்றுக்கொண்டது பல்வேறுவிதமான ஓசைகள் பற்றிய அறிவு மட்டும் அல்ல.  அவள் பாவித்தது கை பிடியுள்ள ஒரு மூடி.  அந்தக் கைபிடியை அவள் தன் விரல்களைப் பாவித்துத் தூக்கியதால் தன்னுடைய விரல் தசைகளுக்கு போதிய பயிற்சி அளித்தாள்.  பிள்ளைகள் பிற்காலத்தில் தம் வேலைகளைத் திறம்படச் செய்வதற்க்காக சிருவயதிலேயே பயிற்றுவிக்கப்பட வேண்டியவை என்பது குரிப்பிடத்தக்க விடயமாகும்.

சிறுவர்கள் தன்னிச்சையான விளையாட்டுக்களினூடாகக் கல்வி கற்க்கின்றார்கள்.  அவர்கள் அவ்வாறு விளையாடும் போது அவர்கலை அவதானிப்பதும்  அவர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சி அடைவதும் அவர்களிற்குத் தேவையான உதவிகள் செய்வதும் அவர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் அவர்கள் கல்வி கற்கும் திறனை அதிகப்படுத்தும்.

No comments:

Post a Comment