என்னைப்பற்றி

நான் இலங்கை நாட்டவள்.  ஜேர்மனியில் புலம் பெயர்ந்து வசிக்கின்றேன்.   இப்போது சிறுவர் பராமரிப்பாளராகத் தொழில் செய்கின்றேன். கணவர் இரண்டு பிள்ளைகளுடனான சிறிய அழகிய குடும்பத்தில் இல்லத்தலைவி.


 சிறுமியாக இருந்த காலங்களில் அன்பான பண்பான பெற்றோர் அன்பு மயமான உறவினர்கள் இடிக்காத பொருளாதார நிலைமை என்று அற்புதமான வரம் கிடைத்தது.  வீடில் கடைக்குட்டி என்பதால் செல்லம் அதிகம்.  சிறுபருவத்தில் நான் பெற்றுக்கொண்ட அற்புதமான அன்பைத் திரும்பப் பிரதிபலிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் மனதில் ஓடிக்கொண்டிருக்கும்.  அதனால் தேடிக்கொள்கின்ற தொழில்களை எல்லாம் சிறுவருடன் தொடர்புடையதாகவே தேடிக்கொள்வேன்.  தாயகத்தில் பதினோரு வருடங்கள் இனிப்பான ஆசிரிய வாழ்க்கை சிறுவர் பற்றிய சிந்தனைகளை இன்னும் வளர்க்கத்தொடங்கியது.  தொடர்ச்சியாக சிறுவர் பராமரிப்புக்கான தொழில்சார் டிப்புளோமாவைக் கையில் எடுத்துக்கொண்டு புலம்பெயர்ந்து திருமணத்துக்காக ஜேர்மனி வந்தேன்.  கையில் சான்றிதழ் இருந்தற்கென்ன ஐரோப்பிய நாடொன்றில் சிறுவர் பராமரிப்பாளராகத தொழில் செய்வதற்கு வேண்டிய நடைமுறை அறிவு எனக்குள் இல்லாதது கண்டு அஞ்சினேன் .  பிள்ளைகள் பெற்று வளர்க்கின்ற அதே  காலப் பகுதியில்  ஒரு சிறுவர் பராமரிப்பாளராக என்னை நானே வளர்த்துக்கொண்டேன்.  இதற்க்காக எனக்குப் பத்து வருடங்கள் தேவைப்பட்டன.  இப்பொழுது என்னை  நான் ஒரு நல்ல சிறுவர் பராமரிப்பாளராக உணர்கின்றேன்.

No comments:

Post a Comment