பிள்ளைகள் பல வழிகளில் தன்னிச்சையாகக் கல்வி கற்கின்றார்கள். அதில் ஆராச்சி செய்து கற்றலும் ஒரு வழியாகும். அது அவர்களுடைய இயற்கைக் குணமாகும்.இதில் பெரியவர்களாக எம்முடைய கடமையெல்லாம் அதற்கேற்ற சூழலை ஏற்ப்படுத்திக் கொடுப்பது மட்டுமேயாகும். அவர்கள் கண்களுக்கும் கைகளுக்கும் எட்டக்கூடிய உயரத்தில் உள்ள பெட்டியொன்றில் பல்வேறுபட்ட பாவனையில் இல்லாத வீட்டுப் பாவனைப் பொருட்களைப் போட்டு வைத்தால் அவர்கள் அந்தப் பொருட்களை ஆராச்சி செய்வதில் அதிக நாட்டம் காட்டுவார்கள். பழைய பணப்பைகள், பூட்டுக்கள், திறப்புக்கள், பிளாஸ்ரிக் டப்பாக்கள், மூடிகள், வண்ண வண்ணத்துணிகள் என்பவை இந்த ஆராய்ச்சிப் பெட்டிக்குள் போட்டு வைக்கக் கூடிய பொருட்களாகும். 2, 3 வயதுடைய பிள்ளைகள் இந்தப் பெட்டிக்குள் உள்ள பொருட்களை ஆராச்சி செய்வதில் அதிக நாட்டம் காட்டுவார்கள். அதிக நேரத்தைச் சத்தமில்லாமல் செலவிடுவார்கள். சிறுவயதுப் பிள்ளைகளை வைத்துக் கொண்டு வீட்டு வேலைகளைச் செய்ய முடிவாமல் அவதிப்படும் அம்மாக்களுக்கு இவ் ஆராச்சிப் பெட்டி பெரிதும் பயன்படும். ஏதோ ஒரு கட்டத்தில் பிள்ளைகளுக்கு இதில் உள்ல பொருட்கள் எல்லாம் அலுத்துப் போகும் போது அவர்கள் அதிலுள்ள பொருட்களை எல்லாம் வீடு முழுக்க வாரி இறைக்கத் தொடங்குவார்கள். அப்போது அம்மாக்களின் வேலை இரட்டிப்பு மடங்காகிவிடும். எனவே அவ்வப்போது இப்பெட்டியை பிள்ளைகளின் கண்பார்வையிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும். அத்துடன் ஒரே பொருட்களைப் போட்டு வைக்காமல் பெட்டியினுள்ளே வித்தியாசமான பொருட்களைப் போட்டு வைக்க வேண்டும்.
சரியாக சொன்னீர்கள்...
ReplyDelete