பிள்ளைகள் பாடசாலை சென்றபின் அவர்களுடைய அறை உட்பட முளு வீட்டையும் ஒதுக்கி சுத்தம் செய்வது அம்மாக்களின் நாளாந்தக் கடமையாக இருக்கிறது. இது எல்லா வீடுகளிலும் நாளாந்தம் நடக்கின்ர செயற்ப்பாடுதான். ஒவ்வொரு அம்மாக்களும் என்ன நோக்கத்திற்க்காக இதைச் செய்கின்றார்களோ, பிள்ளைகள் இதில் பெரிதும் பயன் அடைகின்றார்கள். பாடசாலை முடிந்து அலுத்துக் களைத்து வீடுவரும்போது ஒழுங்காக சுத்தம் செய்யப்பட்டு அடுக்கப்பட்ட அறையும் வீடும் இன்முகமாக அவர்களை வரவேற்கும் போது அவர்கள் பெரிதும் ஆறுதல் அடைகிறார்கள். அவர்களுடைய பாதிக் களைப்பு அதிலேயே தீர்ந்து போகிறது. அதுமட்டும் அல்லாமல் அவர்கள் தமது வீட்டுப் பாடங்களை நேர்த்தியாக ஆரம்பிக்கவும் சுத்தமான வீடு தூண்டுகிறது. அவர்களை அறியாமலே அறை மீண்டும் அழுக்காகிப் போகக் கூடாது என்பதில் அக்கறை காட்டுவார்கள். இது சுத்தம் பேணல் என்னும் நற்ப்பழக்கத்திற்க்கு வழிகோலுகின்றது. இது பாடசாலைப் பிள்ளைகளிற்கு மட்டும் அல்லாது பாலர் பாடசாலைப் பிள்ளைகளிற்கும் பொருந்தும். சுத்தமான அறையொன்றில் விளையாட அனுமதிக்கும் போது பிள்ளைகள் நேர்த்தியாக விளையாடவும் விளையாடி முடிந்தபின் தம் விளையாட்டுச் சாமான்களை ஒழுங்காக அடுக்கி வைக்கவும் தூண்டும்.
மாறாக ஒழுங்காக சுத்தம் செய்யப்பட்டத் அறையும் வீடும் பிள்ளைகளில் ஒழுங்கற்ற விளைழாட்டைத் தூண்டுவதுடன் சுத்தம் பற்றிய எதிர்மறையான எண்ணக்கருவையும் தூண்டும்.
மாறாக ஒழுங்காக சுத்தம் செய்யப்பட்டத் அறையும் வீடும் பிள்ளைகளில் ஒழுங்கற்ற விளைழாட்டைத் தூண்டுவதுடன் சுத்தம் பற்றிய எதிர்மறையான எண்ணக்கருவையும் தூண்டும்.
No comments:
Post a Comment