பாடசாலைப் பிளைகளின் வாழ்க்கையில் அவர்களின் நண்பர்கள் முக்கிய இடம் வகிக்கின்றார்கள். பிள்ளைகளிற்கு நண்பர்கள் இருந்தே ஆகவேண்டும். எவ்வளவிற்கு எவ்வளவு நண்பர்கள் இருக்கின்றார்களோ அவ்வளவிற்கு பிளைகள் சமூக விருத்தி அடைந்திருக்கின்றார்கள் என்று பொருள்படும்.
”என்னுடைய பிள்ளை நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றுவது இல்லை. பாடசாலை விட்டால் வீட்டிற்கு வந்து தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பான்(ள்)” என்று பெருமையாகச் சொல்கின்ற பெற்றோரை நான் பார்த்திருக்கின்றேன்.
உண்மையாகவே நண்பர்கள் தொடர்பு இலாமல் பிள்ளைகள் தனிமையாகப் பொழுதைக் கழிப்பது பெருமைப்படக் கூடிய விடயமல, மாறாகக் கவலைப்பட வேண்டிய விடயம்.
9 வயது நிரம்பிய என் மகனுக்கு இதே விதமான ஒரு பிரச்சனை இருந்தது. அவருக்கு வகுப்பு மட்டதில் நண்பர்கள் யாரும் இருக்கவில்லை. தன்னைத் தன்னுடைய சக மாணவர்கள் ஏழனமாகப் பார்ப்பதகவும் விரோதியாகப் பார்ப்பதாகவும் உணர்ந்து கொண்டார். இந்த எண்ணம் அவருக்கு மிகுய்த மன வேதனையை அளித்தது. அடிக்கடி என்னிடம் சொல்லிக் குறைப்படுவார். இது எனக்கும் மனவருத்ததை அளித்தது.
இந்தப் பிரச்சனையைத் தீர்க்க எனக்கு உதவியது அவருடைய பிறந்தநாள் விழாத்தான். அவருடைய பிறந்தநாள் விழாவிற்கு அவருடய வகுப்பு மாணவர்கள் எட்டுப் பேருக்கு அழைப்பிதழ் வழங்க அவருக்கு அனுமதி அளித்திருந்தேன். அவரும் தன்னுடன் ஓரளவு நெருக்கமான எட்டுப் பிள்ளைகளிற்கு அழைப்பிதழ் கொடுத்திருந்தார்.
பிறந்தநாள் அன்று பிளைகள் விரும்பி உண்ணக்கூடிய உணவுப் பொருட்களை மேசையில் அடுக்கி வைத்தேன். பிள்ளைகள் ஓடியாடி விளையாடுவதற்கு இடவசதி செய்து கொடுத்தேன். விழாவிற்கு வந்திருந்த ஒவ்வொரு பிள்ளையும் அன்பளிப்பாக என் மகனுக்குப் பிடித்த விளையாட்டுப் பொருட்கள் கொண்டு வந்திருந்தார்கள். 4 மணித்தியாலங்கள் உணவு விளையாட்டு என்று பிள்ளைகள் பொழுதை மிக மகிழ்ச்சியாகவே கழித்தார்கள். என் மகனும் இன்பக்கடலில் மூழ்கினார். அவர் அவருடைய சக மாணவர்களை நன்கு புரிந்து கொண்டார். தான் மற்றப் பிள்ளைகளினால் அங்கீகரிக்கப் படுவதை உணர்ந்து கொண்டார்.
விழா முடிவில் ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒர் சிறு பையில் தின் பண்டங்களும் சிறிய விளையாட்டுப் பொருளும் வைத்துக் கொடுத்தேன். பிள்ளைகளின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
இந்தப் பிறந்தநாள் விழாவின் பின்பு என் மகனிற்கு நண்பர்களிற்குக் குறைவே இல்லாமல் போய் விட்டது. பாடசாலை முடிந்தபின்பு வீட்டுப்பாடம் செய்வார்.
அதன் பின்பு வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்காமல் வெளியே சென்று ஓடியாடி விளையாடுகின்றார். நானும் ஒரு பிரச்சனை தீர்ந்த மனமகிழ்ச்சியில் இருக்கின்றேன்.
No comments:
Post a Comment