Monday, 20 May 2013

சூழலை அறிதலும் உடற்பயிற்சியும்




சிறுவர் சிறுமியருக்குத் தோட்டத்தில் விளையாடுவது என்றால் கொள்ளைப் பிரியம்தான்.  அதிலும் மரங்களில் ஏறி இறங்குவது என்றால் கேட்கவே வேண்டாம்.  ஆம் உண்மையிலேயே அது அவர்களுக்கு ஒரு சிறந்த உடற்பயிற்சியாக அமையும்.  அவர்களின் கை கால்களில் உள்ள பெரிய தசைகள் விருத்தி அடைவதற்கு உதவி செய்யும்.

உடற்பயிற்சி தருவது மட்டும் அல்லாது வேறு ஒரு நன்மையும் இந்த வகையான தொழிற்ப்பாடுகளில் கிடைக்கின்றது.   அதாவது, சிறுவர்கள் தாம் வாழும் சூழலை ஆராச்சி செய்து கற்கும் இயல்பு உடையவர்கள்.  இவ்விதமான
மரம் ஏறும் தொழிற்ப்பாடுகள் பிள்ளைகளில் ஆராச்சி இயல்புகளை அதிகப்படுத்துகின்றன.   இவ்விதமாகத் தமக்கு விருப்பமான, சுதந்திரமான விளையாட்டுக்களினூடாக அவர்கள் கற்கும் அனுபவக் கல்வியானது அவர்களின் பாடசாலைக் கல்விக்கு நிச்சயம் உதவி செய்யும்.

பெற்றோர்களாகிய நாம், பிள்ளைகள் நல்ல சூரிய ஒளியிலும் சுத்தமான காற்றிலும் வெளிப்புறச்சூழழில் விளையாட சந்த்தர்ப்பம் ஏர்படுத்திக்கொடுக்க வேண்டும்.  வெளிப்புறச் சூழல் விளையாட்டுக்களில் ஆபத்துக்கள் அதிகம்.  பிள்ளைகளின் பாதுகாப்பிற்கு பெற்றோர் பூரண உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

மேலதிக வாசிப்புக்கு  விளையாட்டு

No comments:

Post a Comment