Sunday, 29 September 2013

பள்ளிப் பிள்ளைகளுக்கு காலை உணவின் அவசியம்

மருத்துவ சுகாதார உலகத்தால் இப்போதெல்லாம் காலை உணவின் அவசியம் உலகம் முழுவதிலுமே வலியுறுத்தப் படுகின்றது.  ஒருவர் அன்று நாள்முழுவதும் தொழிற்படுவதற்க்கு வேண்டிய சக்தியைக் காலை உணவு தருகின்றது.  காலை உணவைச் சரிவர எடுக்காத ஒருவரால் அன்றைய நாளுக்கான கடமைகளைச் சரிவரச் செய்து முடிக்காமல் போகலாம்.  விசேடமாக சிறு பிள்ளைகளிற்கும் பள்ளிப் பிள்ளைகளிற்க்கும் காலை உணவு மிகவும் அவசியம்.

ஆனால் பாடசாலைப் பிள்ளைகளிடையே சரிவரக் காலை உணவு அருந்தாத பழக்கம் நிலவுகின்றது.  காலை நேர அவசரத்தில் பஸ்ஸை விட்டுவிடுவோமோ அல்லது பாடசாலைக்குப் பிந்தி விடுவோமோ என்கிற பதட்டத்தில் பிள்ளைகள் காலை உணவை அலட்சியம் செய்கின்றார்கள்.

ஆனாலும் பெற்றோர் காலை உணவின் அவசியத்தை பிள்ளைகளுக்கு உணர்த்தி அவர்கள் காலை உணவு உண்ண வலியுறுத்த வேண்டும்.  காலை உணவானது சக்தி தரக்கூடிய பாண், பட்டர் அல்லது அதற்குச் சமமான உணவைக் கொண்டிருப்பதுடன் பால் பழம் போன்ற போசணை உணவுகளையும் கொண்டிருக்க வேண்டும்.

மேலதிக வாசிப்புக்களுக்கு மாலா காலை உணவு உண்கின்றாள்
                                                          maala is having breakfirst

2 comments:

  1. உண்மை... உண்மை... காலை உணவு நன்றாக உண்ணும் குழந்தைகள் படிப்பிலும் விளையாட்டிலும் படு சுட்டி... பெற்றோர்கள் அனைவரும் உணர வேண்டும்...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்கு நன்றி

      Delete