சிறுவர் உலகம் தனித்துவமானது. அதை நாம் புரிந்து கொள்ளும் போது அவர்களுக்கு இலகுவாக வழிகாட்ட முடியும்.
Showing posts with label காலை உணவு. Show all posts

Sunday, 29 September 2013
பள்ளிப் பிள்ளைகளுக்கு காலை உணவின் அவசியம்
மருத்துவ சுகாதார உலகத்தால் இப்போதெல்லாம் காலை உணவின் அவசியம் உலகம் முழுவதிலுமே வலியுறுத்தப் படுகின்றது. ஒருவர் அன்று நாள்முழுவதும் தொழிற்படுவதற்க்கு வேண்டிய சக்தியைக் காலை உணவு தருகின்றது. காலை உணவைச் சரிவர எடுக்காத ஒருவரால் அன்றைய நாளுக்கான கடமைகளைச் சரிவரச் செய்து முடிக்காமல் போகலாம். விசேடமாக சிறு பிள்ளைகளிற்கும் பள்ளிப் பிள்ளைகளிற்க்கும் காலை உணவு மிகவும் அவசியம்.
ஆனால் பாடசாலைப் பிள்ளைகளிடையே சரிவரக் காலை உணவு அருந்தாத பழக்கம் நிலவுகின்றது. காலை நேர அவசரத்தில் பஸ்ஸை விட்டுவிடுவோமோ அல்லது பாடசாலைக்குப் பிந்தி விடுவோமோ என்கிற பதட்டத்தில் பிள்ளைகள் காலை உணவை அலட்சியம் செய்கின்றார்கள்.
ஆனாலும் பெற்றோர் காலை உணவின் அவசியத்தை பிள்ளைகளுக்கு உணர்த்தி அவர்கள் காலை உணவு உண்ண வலியுறுத்த வேண்டும். காலை உணவானது சக்தி தரக்கூடிய பாண், பட்டர் அல்லது அதற்குச் சமமான உணவைக் கொண்டிருப்பதுடன் பால் பழம் போன்ற போசணை உணவுகளையும் கொண்டிருக்க வேண்டும்.
மேலதிக வாசிப்புக்களுக்கு மாலா காலை உணவு உண்கின்றாள்
maala is having breakfirst

Subscribe to:
Posts (Atom)