Sunday, 28 September 2014

குழந்தைகளை நீண்ட நேரம் சொகுசாகத் தூங்க்க வைக்க ஒரு உத்தி.


 யசினுக்கு இப்போது மூன்று வயது.   அவன் மூன்று மாதக் குழந்தையாக இருந்த காலதில் இருந்தே என்னிடம் பராமரிப்புகாக வருகின்றான். ஆரம்ப காலங்க்களில் காலை வேளைகளில் ஒரு முறை மதிய வேளைகளில் ஒரு முறை என இரு    தடவைகள் தூங்குவான்.  இப்போதெல்லாம் மதிய உணவு முடிந்தபின்பு ஒரு தடவை தூங்குகின்றான். ஆரம்ப காலத்தில் இருந்தே அவனை என்னிடம் ஒப்படைக்கும் போது அவனுடைய தாயார் ஒரு துணிப்பையையும் என்னிடம் தருவார்.  அந்தத் துணிப்பையில் அவனுக்குத் தேவையான மாற்றுத் துணிகள், பொம்மைகள், இன்னும் பிற பொருட்களுடன் ஒரு 50 சென்றி மீற்றர் நீள அகலமான ஒரு பழைய மென்மையான வெள்ளைத் துணியும் இருக்கும்.  அது அவன் தூங்கும் போது கையில் வைத்துக் கொள்வதற்காக.



அவனுடைய நித்திரைக்காக நான் ஒரு சொகுசான, கதகப்பான, சுத்தமான படுக்கை தயாரித்து வைத்து இருப்பேன்.  உணவு வேளை முடிந்தபின் அவனைப் படுக்கையில் கிடத்தும் போது அவனுடைய  பொம்மைகளுடன் சேர்த்து இந்ததத் துணியையும் அவன் கையில் கொடுத்து விடுவேன். அதன் பின்பு யன்னளைச் சற்றே மூடி அறையை மெல்லிய இருட்டாக்கி விடுவேன்.  பின்பு இயன்றவரை சத்தமற்ற ஒரு சூழலை உருவாக்குவேன்.  அவன் அந்தத் துணியை அணைத்துக் கொண்டு சொகுசாக நீண்ட நேரம் துங்குவான்.  அவனுடைய தாயாரும் இதையேதான் செய்கின்றார்.  இந்தப் பழக்கம் அவன் பிறந்த காலத்தில் இருந்தே தொடர்கின்றது.

ஒரு நாள் அவனுடைய தாயார் அவனுடைய துணிப்பையில் அந்த வெள்ளைத் துணியை வைக்க மறந்து விட்டார்.  அன்று தான் எனக்குப் பிரச்சனை.  அந்த வெள்ளைதுணி இல்லாமல் அவன் துங்க மறுத்து விட்டான்.  ஒரே அழுகையும் ஆர்பாட்டமும் தான்.  சரி ஒரு வெள்ளைத்துணி தானே, என் வீட்டில் இருந்த அதை ஒத்த ஒரு துணியைத் தேடிப்பிடித்து அவனிடம் கொடுத்தேன். அவன் விருட்டென்று அதை வாங்கி கையில் சுருட்டி மூக்கின் அருகே கொண்டு சென்று மணந்து பார்தான்.  அவன் எதிர்பார்த்த மணம் அதில் இருந்து வரவில்லை.  அவனுக்கு வந்தததே ஒரு கோபம்.  அந்தத்  துணியை சட்டென்று சுழற்றி எறிந்தான்.  அன்று மதியம் அவன் தூங்கவே இல்லை.

இந்த சம்பவத்தில் இருந்து நான் ஒன்றைத் தெரிந்து கொண்டேன்.  அதாவது, சிறு பிள்ளைகள், தாம் நாளாந்தம் பழகிய சுகந்தமான ஓர் மணத்தில் இருந்து பாதுகாப்பு உணர்வையும், அரவணைப்பையும் பெறுகிறார்கள்.  அவர்களின் இந்த இயற்கையான இயல்பை   நாம் அவர்களின் சுகமான தூக்கத்திற்குப் பயன்படுத்தலாம்.

No comments:

Post a Comment