ஆரோக்கியமான வாழ்விற்கு தினமும் உடற்பயிற்சி செய்தல் ஒவ்வொருவருக்கும் அவசியம். தினமும் உடற்பயிற்சி செய்யும் பழக்கம் சிறுவயதில் இருந்தே ஊட்டப்பட வேண்டும்.
ஆரோக்கிய வாழ்விற்கு தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம் என்பது எல்லோரும் அறிந்த விடயம் தான். ஆனாலும் தம் பிள்ளைகளை தினமும் உடற்பயிற்சி செய்யத் தூண்டுவது இன்றைய பெற்ரோருக்கு ஒரு பெரிய சவாலாகவே இருக்கிறது. இதற்கான முக்கிய காரணம், தற்காலப் பிள்ளைகள் தொலைக்காட்சியிலும் வீடியோ விளையாட்டுக்களிலும் அதிக அக்கறை காட்டுவதுதான். அதுமட்டும் அல்லாமல் அதிகமான பெற்ரோர்கள் பிள்ளைகள் வீட்டிற்க்கு வெளியே விளையாடப்போவதை பாதுகாப்புக் குறைவாக எண்ணுகின்றார்கள்.
பிள்ளைகள் மணித்தியாலக் கணக்காக தொலக்காட்சி, கணிணி என்பவற்றின் முன் இருப்பதற்கு பெற்றோர் அனுமதிக்கக் கூடாது. பிள்ளைகள் அன்றைக்குத் தேவையான உடற்ப்பயிற்சிகளை எடுக்கின்றார்களா என்பதில் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும். அதற்க்கான உதவிக் குறிப்புகள் சில
1. பிள்ளைகளுக்கு சிறந்த முன்னுதாரணமாக இருத்தல். எமக்குத் தேவையான உடற்பயிற்சிகளை நாமே எடுத்தல்.
2. பிள்ளைகளுடன் சேர்ந்து சைக்கிள் ஓடுதல், நீச்சல், பந்து விளையாடுதல் போன்ற தொழிற்பாடுகளில் ஈடுபடுதல்.
3. இசை, நடனம் போன்றவற்றில் பிள்ளைகளை ஈடுபடுத்துதல். இசைக்கு நடனம் ஆடுதலை விரும்பாதவர்களே இருக்க மாட்டார்கள். நடனமாடுதல் ஒரு சிறந்த உடற்பயிற்சியாகும்.
4. வசதி இருக்கிற பட்சத்தில் அவர்களை காற்பந்து, கைப்பந்து போன்ற விளையாட்டுப் பயிற்சிகளுக்கு அல்லது உடற்பயிற்சி வகுப்புக்களுக்கு அனுப்புதல்
5. பிள்ளைகளைக் கடைக்குக் கூட்டிக்கொண்டு போதல். பிள்ளைகள் கடைகளிற்க்குச் சென்று தமக்கு விருப்பமான உணவுப்பொருட்கள், புத்தகங்கள், விளையாட்டுப் பொருட்கள் என்பவற்றைப் பெரிதும் விரும்புவார்கள். எனவே கடைகளிற்கு நடந்து செல்லுதல் கூட ஒருவித உடற்பயிற்சிதான்.
6. நண்பர்கர்ளுடன் வெளியே சென்று விளையாட அனுமதிதல். பிள்ளைகள் நண்பர்களுர்டன் வெளியே சென்று விளையாடப் பெரிதும் விரும்புவார்கள். ஒருசில பெற்றோர்கள் பிள்ளைகளை நண்பர்களுடன் விளையாட அனுமதிப்பதில்லை. அப்படியான சந்தர்ப்பதில் பிள்ளைகள் தொலைக்காட்சி முன் இருக்கவே செய்வார்கள்.
அன்புப் பெர்ரோரே! தினமும் பிள்ளைகளுடன் சேர்ந்து போதிய அளவு உடற்பயிற்சிகளை எடுத்து அவர்களுடன் சேர்ந்து உடல் ஆரோக்கியத்தை அனுபவியுங்கள்.

நாமும் பங்கேற்றால் தினமும் தொடரும்... அதற்கான நேரத்தையும் ஒதுக்கவும் வேண்டும்... நன்றி... தொடர வாழ்த்துக்கள்...
ReplyDeleteம்ம்.. மிக முக்கியமாக பெற்றோருக்கும்தேவையான ஒன்று
ReplyDelete