அன்று ரமணனுக்கும் கீதாவுக்கும் மகிழ்ச்சியான நாள். வெளியூரிலிருந்து சித்தப்பாவும் சித்தியும் அவர்கள் பிள்ளைகளும் வந்திருந்தார்கள். அவர்கள் நிறையத் தின்பண்டங்களும் பரிசுப்பொருட்களும் கொண்டு வந்திருந்தார்கள். அதுமட்டும் அல்லாமல் ரமணன் கீதாவுடைய ஆடல் பாடல் எல்லாம் ரசித்துக்கொண்டு அவர்களுடைய கதைகள் எல்லாம் பொறுமையாகக் கேடுக்கொண்டிருந்தார்கள். சித்தப்பாவின் பிள்ளைகள் ரமணன் கீதாவுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தனர். ரமணனும் கீதாவும் மகிழ்ச்சியின் உச்சத்துக்குச் சென்றுவிட்டார்கள். அவர்களுடைய மகிழ்சி ஆரவாரத்தால் வீடே இரண்டுபட்டது.
இப்போது இரவு உணவு நேரம். எல்லோரும் சாப்பாட்டு மேசைக்கு வந்து அமர்ந்துவிட்டார்கள். ஆனால் பிள்ளைகளின் ஆரவாரம் குறைந்தபாடு இல்லை. அவர்கள் சாப்பாட்டு அறையில் ஓடி ஆடிக்கொண்டும் சத்தமிட்டுக் கொண்டும் இருந்தார்கள். சாப்பாட்டு மேசையில் இருந்தபின்பு பிள்ளைகள் அளவுக்கு அதிகமாக சத்தமிடுவதை ரமணனின் தாயார் எப்போதும் அனுமதிப்பதில்லை. சாப்பாட்டு வேளையென்பது ஆரவாரம் இல்லாமல் அமைதியாக இருக்கவேண்டிய ஒரு வேளையாகும்.
பிள்ளைகளை அமைதிப்படுத்த ரமணன் கீதாவின் தயார் தான் வழக்கமாகக்
கையாழும் உத்தியைக் கையாண்டார். தன் கைகளிரண்டாலும் தன்னைத்தானே கட்டிக்கொண்டார், ரமணன் கீதாவுக்கு உடனே விளங்கிவிட்டது. தாயார் போலவே தாங்களும் தம்மைத்தாமே கட்டிக்கொண்டார்கள். சித்தப்பா குடும்பத்திற்கு ஒரே புதிராக இருந்தது. ரமணனும் கீதாவும் பாட ஆரம்பித்தார்கள்.
எம்மை நாமே கட்டிக்கொண்டு
மூச்சை இழுத்து விட்டோமே,
மனதில் அமைதி கொண்டோமே.
(இந்தப் பாடல் என்னால் இயற்றப்பட்டதுதான். பொருள் மாறுபடாமல் எளிய சொற்களைக் கொண்டு விரும்பியபடி இயற்றிக்கொள்ளலாம்.)
சித்தப்பாவும் சித்தியும் இதுபற்றி வினவினார்கள். உடனே ரமணனின் தாயார் இதுபற்றி விளக்கம் அளித்தார். அதாவது ஆரவாரப்படும் பிள்ளைகளை அமைத்திப்படுத்த இது ஒரு சிறந்த வழியாகும். பிள்ளைகள் தம்மைத்தாமே தம் கைகளால் இறுகக் கட்டிக்கொண்டு மூச்சை ஆழமாக உளிழுத்து வெளியே விடவேண்டும். அப்போது அவர்கள் உள்ளத்தில் அமைதி உண்டாகும். அதன் பின்பு அவர்கள் அமைதி நிலைக்குத்திரும்புவார்கள்.
இந்த விளக்கத்தைக் கேட்ட சித்தப்பா குடும்பம் பலமுறை இதைச் செய்து பார்த்தது. அவர்களுக்குள் அமைதி உண்டாவதை அவரகளே உணர்ந்து கொண்டார்கள். அதன் பின்பு அமைதியாக எல்லோரும் சாப்பிடத் தொடங்க்கினார்கள்.
சாப்பாட்டுவேளை மட்டுமல்லாது படிப்பு ஆரம்பிக்கும் வலை, நித்திரக்க்குச் செல்லும்வேளை போன்ற வேளை களில் கூட இந்த உத்தி கையாளப்படலாம்.
பாடசாலை ஆசிரியர்கள் கூட பிள்ளைகளை அமைதிப்படுத்த இதைப் பயன்படுத்தலாம்.
No comments:
Post a Comment