பாடசாலைக் கல்வி என்றால் அதில் நிச்சயம் வீட்டுப்பாடம் இருக்கும். பாடசாலைகளில் பிள்ளைகளுக்கு ஏன் வீட்டுப்பாடம் வழங்க்குகின்றார்கள்?
பாடசாலையில் படிக்கின்ற ஒரு பாட அலகை பிள்ளைகள் நினைவில் வைப்பதற்கு மீட்டல் அவசியமாகும்.அந்த மீட்டலானது காலம் தாழ்த்தாமல் உடனேயே செய்யப்பட வேண்டியதாகும். பிள்ளைகள் வீட்டுப் பாடம் செய்யும் போது தம்மை அறியாமலே அன்று தாம் படித்த பாட அலகை மீட்டல் செய்து விடுகின்றார்கள். அதுமட்டுமல்லாது அன்று தாம் பாடசாலையில் படித்த பாட அலகு எந்த அளவிற்க்கு தமக்குப் புரிந்திருக்கின்றது தாமே அளவிட்டுக் கொள்கின்றார்கள். இது அவர்கள் தமக்குப் புரியாத பகுதியை பிறர் உதவியுடன் புரிந்துகொள்ளவும் உதவி செய்கின்றது. தன்னகத்தே இவ்வளவு நன்மைகளைக் கொண்ட வீட்டுப்பாடத்தைப் பிள்ளைகள் பெரிதும் விரும்புவது இல்லை.
அதிகமான பிள்ளைகள் வீட்டுப்பாடங்க்களை வெறுப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. வீட்டுப் பாடங்கள் அதிகளவில் இலகுவாக இருந்தாலோ அல்லது கடினமாக இருந்தாலோ பிள்ளைகள் அதை வெறுக்கின்றார்கள் அதுமட்டுமல்லாது நண்பர்களுடன் செலவழிக்கவேண்டிய பொன்னான நேரம் பறிபோகின்றதே என்ற எண்ணத்திலும் பிள்ளைகள் வீட்டுப் பாடங்களை வெறுக்கின்றார்கள்.
பிள்ளைகளை சுவாரசியமாக வீட்டுப்பாடங்க்களைச் செய்யவைக்க வழியொன்று உள்ளது. அதுதான் நண்பர்கள். பிள்ளைகளைத் தமது நண்பர்களுடன் சேர்ந்து வீட்டுப்பாடம் செய்ய அனுமதிக்கும் போது அவர்கள் வீட்டுப்பாடம் செய்வதை சுவாரசியமாக உணர்கின்றார்கள். வீட்டுப்பாடங்க்களல் விரைவில் முடித்தால் நண்பனுடன் அல்லது நண்பியுடன் சேர்ந்து விளையாடும் நேரம் அதிகரிக்கும் என்ற ஆவலில் விரைவாக வீட்டுப்பாடங்க்களை முடிக்க முயற்சி செய்வார்கள். அதுமட்டுமல்லாது தமக்கு விளங்காத பகுதிகள் ஏதாவது இருப்பின் ஒருவர் ஒருவருக்கு விளங்கப்படுத்த முயற்சி செய்தோ அல்லது இருவருமாகச் சேர்ந்து ஆய்வுகள் செய்தோ விளங்கிக் கொள்வார்கள்.
முக்கிய குறிப்பு : நண்பர்கள் அதிக எண்ணிக்கையில் சேர்ந்து வீட்டுப்பாடம் செய்ய முயற்சி செவ்தால் அது சத்தம் சந்தடியுடனான விளையாட்டில் முடிவடையக்கூடும். சேர்ந்து வீட்டுப்பாடம் செய்வதற்காகக் கூடும் நண்பர்கள் குழு இரண்டு அல்லது மூன்று பேர் கொண்டதாக மட்டுமே அமைய வேண்டும்.
No comments:
Post a Comment