Sunday 29 September 2013

காலையில் பல் துலக்கச் சரியான நேரம் எது?

காலையில் நித்திரை விட்டு எழுந்தவுடன் பல் துலக்கி முகம் கழுவிய பின்னரே தேநீர் அல்லது காலையுணவை உள்ளெடுக்கும் பழக்கம் எம்மவரிடையே பரவலாக உள்ளது.
 ஆனால் இந்த வெள்ளைக்காரர்கள், காலையில் எழுந்தவுடன் உணவருந்திவிட்டு அதன் பின்னரே பல் துலக்கும் பழக்கத்தைக் கொண்டவர்கள். இது எனக்கு நீண்ட காலமாகப் புரியாத புதிராகவே இருந்தது.  ஆனாலும் பல் வைத்தியர்களினதும் மருத்துவ சுகாதார நிறுவனங்களினதும் தொடர்ச்சியான அறிவுறுத்தல்களின் பின் எனக்குள் ஒரு தெளிவு பிறந்தது.

உண்மையில் பல் துலக்குவதன் நோக்கமே, சாப்பிட்டு முடிந்தபின்பு பல் ஈறுகளில் அகப்பட்டிருக்கும் உணவுத் துணுக்குகளை அகற்றுவதுதான். ஏனென்றால் இந்த உணவுத்துணுக்குகள் தான் பற்சிதைவை ஏற்ப்படுத்தும் பற்ரீரியாக்களுக்கு இடமளிக்கின்றன.

இரவு உணவு முடிந்ததும் முறையாகப் பல் துலக்கிவிட்டு படுக்கைக்குச் செல்வோமானால் அதிகாலையில் எழும்போது எம் பல் ஈறுகளிடையே உணவுத்துணுக்குகள் இருப்பதற்கு சாத்தியம் இல்லை.  அதனால் அதிகாலையில் நித்திரை விட்டு எழுந்தவுடனேயே பல் துலக்க வேண்டும் என்பதும் அவசியம் இல்லை.  மாறாக காலை உணவு முடிந்தபின்பு பல் துலக்குவதுதான் பொருத்தமானது.  அப்போதுதான் காலை உணவின் பின் பல் ஈறுகளில் அகப்பட்டுள்ள உணவுத்துணுக்குகளை அகற்ற முடியும்.

இது எனது சொந்தக் கருத்து இல்லை.  பல் வைத்தியர்கள் அனைவரினதும் ஏகோபித்த கருத்தும் இதுவேயாகும்.

1 comment:

  1. காலை எழுந்தவுடன் முடிந்தளவு (Min. 1 லிட்டர் ) தண்ணீர் குடித்தால், அன்று முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும்...

    ReplyDelete