Saturday 25 October 2014

சிறுவர்கள் மிகக் குழந்தைப் பருவத்திலேயே கல்வி கற்க்க ஆரம்பித்துவிடுகின்றார்கள்


உண்மைச் சொல்வதானால் பிள்ளைகள்  பிறந்த கணத்திலேயே கல்வி கற்க ஆரம்பித்துவிடுகின்றார்கள்.  மிக ஆரம்ப காலங்களில் அவர்களுடைய கல்வியானது அவர்களுடைய ஐந்து புலன்களின் ஊடாகவுமே நடைபெறுகின்றது.  அவர்கள் தம்முடைய கல்வியை மிக மகிழ்ச்சியும், பாதுகாப்பும் சுதந்திரமுமான சூழலிலேயே கற்க விரும்புகின்றார்கள்.


சிறுவர்கள் தம்மை விட வயதில் மூத்த பிள்ளைகளைப் பின்பற்றுவதன் மூலம் அதிகளவில் கல்வி கற்கின்றார்கள். பிள்ளைகள் பின்பற்றக்கூடிய நல்ல கல்வியார்வமுடைய பிள்ளைகளுடன் பொழுதைக் கழிக்கின்றார்களா என்பதில் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும்.
----------------------------------------------------------------------------------------------------

சிறுவர்கள் பிறருடைய  எவற்புறுத்தல் எதுவுமின்றி தன்னிச்சையாக மிக அமைதியானதும் இடையூறுகக் அற்றதுமான சூழலில் தமது ஐம்புலன்களைப் பயன்படுத்தி தொட்டுணர்ந்து, முகர்ந்து பார்த்து கல்வி கற்க, ஆராச்சிகள் செய்ய விரும்புகின்றார்கள்.
---------------------------------------------------------------------------------------------------------------
சிறுவர்கள் மிகச்சிறு பருவத்தில் உணவுப்பொருட்களை தொட்டு உணர்ந்து பார்ப்பதன் மூலம் கல்வி கற்கின்றார்கள். அவர்களின் இந்தச் செயற்ப்பாடு அனுமதிக்கப்பட வேண்டியதாகும்.
-------------------------------------------------------------------------------------------------------------------

சித்திரம் வரைதல் பிள்ளைகளுக்கு மிகவும் பிடித்தமான கல்விச்செயற்ப்பாடாகும். அதிலும் வண்ணங்களைத் தமது கைவிரல்களினான் தொட்டுணர்ந்த்து பார்ப்பது அவர்களுக்கு மிகுந்த பலன் கொடுக்கக்கூடியதொன்றாகும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment