Sunday 13 March 2016

சுதந்திரக் கற்றல்


அப்போது எனக்கு நான்கு வயது.  அது ஒரு அழகிய இலையுதிர்காலம்.  மாலை நான்கு மணி வாக்கில் என் அம்மா என்னைப் பாலர் பாடசாலையிலிருந்து கூட்டிச் செல்ல வந்திருந்தார்.  வீதி முழுவதும் ஒரே காய்ந்த சருகுகளும் விதைகளும் கொட்டிக்  கிடந்தன.  அவற்றைப் பார்த்தபோது எனக்கு   அவற்றுடன் விளையாட   விருப்பமாக இருந்தது.  நான் சற்று விளையாடலாமா  என அம்மாவிடம் கேட்டேன்.  அம்மா சம்மதம் தெரிவித்தார்.  எனக்காகப் பொறுமையுடன் காவல் இருந்தார்.  என்னுடன் சேர்ந்து விளையாடினார்.  என்ன கேவிகளுக்கு எலாம் பொறுமையுடன் பதில் சொன்னார்.

எனக்கு அங்கு கண்ட இலைகள், காய்ந்த விதைகள், தடிகள் சிலவற்றை வீட்டிற்கு எடுத்துச் செல்ல ஆவலாக இருந்த்தது.  அம்மாவிடம் அதுபற்றிக் கூறினேன்.  அம்மா உடனே தயாராக வைத்திருந்த ஒரு சிறு பையை என்னிடம் தந்தார்.  நான் அப்பையினுள் எனக்கு விருப்பமான பொருட்கள் சிலவற்றைச்  சேகரித்தேன்.   சிறிது நேரம் கழித்து இருவரும் வீடு திரும்பினோம்.  கை கழுவிவிட்டு உணவு உண்டேன்.

என்னைச் சுதந்திரமான ஒரு விளையாடுச் சூழலில் நான் விரும்பும் கல்வியைக் கற்க ஊக்கமும் பாதுகாப்பும் ஒத்துழைப்பும் தந்த அம்மாவிற்கு நன்றி.

1 comment: